அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8-ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில், 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது. தினகரன் தரப்பில் தாக்கலான 1280 , பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது.
தினகரன் அணிக்கு 20 , பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர். அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது.
லோக்சபாவில் 34 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும் ஆதரவாக உள்ளனர். ராஜ்யசபாவில் முதல்வர் அணிக்கு 8 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும், ஆதரவாக உள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி குழப்பத்தின் போது எடுக்கப்பட்ட முடிவே இப்போதும் எடுக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அளித்த 83 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த ஆதரவின்படி இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
தீர்ப்பின் முடிவால் அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம். அ.தி.மு.க., கட்சி , கொடி, அலுவலகம் அனைத்தும் பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம்.
மார்ச் 22 ம் தேதி இரட்டை இலையை முடக்கிய கமிஷன் உத்தரவு இதம் மூலம் வாபஸ் ஆகும் . அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபாஇனி உரிமை கோர முடியாது .. சசிகலா தினகரன் உள்ளிட்டவர்கள் உன்மேல அதிமுகவில் கிடையாது.
lசென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்பழனிசாமி, இன்றைக்கு தேர்தல் ஆணையம் தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தந்திருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த தகவலை அடுத்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் ஈபிஸ், ஓபிஸ் அணியினருக்கு கிடைத்ததில் டிடிவி தினகரன் தரப்பு அணியினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்றும் மத்திய அரசின் தலையிடு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தீர்ப்பை படித்த பின்னர் நீதிமன்றம் சென்று இதனை எதிர்க்க போவதாக தினகரன் அணியினர் கூறிகிறார்கள்.
ஆர்கே தேர்தல் வரப்போகும் நிலையில் இரட்டை இலையில் சென்ற முறையில் போட்டியிட்ட அதிமுகவின் ஜெயலலிதா 39,545 வோட்டில் வெற்றி பெற்ற நிலையில் ., தேர்தல் ஆணையம் இந்த முறை 45000 கள்ள ஓட்டுகளை அழித்ததாக கூறியதும் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.