சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

Special Correspondent

நிலம் மற்றும் கடல்வழி இலக்கை மட்டுமே வைத்து சோதித்து பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது வான்வெளியில் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் ெவளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்காள விரிகுடா கடலில் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை நேற்று சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானம் மூலம் வெற்றிகரமாக வீசி சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பிரம்மோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. உலகின் அதிவேகமான ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புப் படையின் மிக முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ். வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாகத் தாக்கி பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை அழித்தது. போர் விமானத்தில் இருந்து முதல் முறையாக இந்த ஏவுகணையை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய விமானப் படையின் பலம் கூடுதலாகி உள்ளது.

சுகோய் ஜெட் விமானம் - பிரம்மோஸ் ஏவுகணை ஆகிய இரண்டும் சேர்ந்துள்ளதால் இனி சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் போன்றவற்றை நடத்துவது முன்பை விட எளிமையாகி உள்ளது.

பிரம் மோஸ் ஏவுகணை 3,200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. தரை, கடல், வான்வெளி என எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடி யும் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்ற காங்கிரஸ் சர்க்கார் தலைமையில் அக்டோபர் 2012 ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்ட ஏவுகணை பிரம்மோஸ் சுகோய் போர் விமானத்தில் பொறுத்த அனுமதி வழங்கப்பட்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம். பிரிவின் கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.