குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

Special Correspondent

எனினும் பட்டேல் சமூகத்தில், ஹர்த்திக் பட்டேல், 24 தலைமையில் பி.ஏ.ஏ.எஸ். எனப்படும் ‛‛பதிதார் அனாமத் அந்தோலன் சமிதியும்'' தேர்தலில் களத்தில் குதிக்க தயாராகி வருகிறது.

இந்த அமைப்பின் இளம் தலைவரான ஹர்திக் பட்டேல் பா.ஜ.க. - வையும் அதன் தலைமையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது சமூகத்தினரின் கல்வி , வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவை நாம்அறிவிக்காவிட்டாலும், நாம் பா.ஜ.க. - வுக்கு எதிராக போராடுகிறோம். எனவே நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் காங்கிரசை தான் ஆதரிக்கிறோம்.

பா.ஜ.க. தோற்றால், அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடும். வடக்கு குஜராத்தில் நமது அமைப்பினருக்கு அக்கட்சி 50 லட்ச ரூபாய் வரை பேரம் பேசியது.

தோல்வி பயம் காரணமாக இதுபோன்ற நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபடுகிறது என கூறிய படேல், தங்கள் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

சுமார் 56 தொகுதி நிலவரத்தை நேரிடையாக முடிவு செய்யும் படேல் சமூக மக்களின் ஓட்டு காலம்காலமாக பிஜேபி க்கு சென்று உள்ளது இம்முறை படேல் மக்கள் ஹர்த்திக் பட்டேல் பேச்சை கேட்டு காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டு விட்டால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தில் பிஜேபி யினர் தேர்தல் வேலையில் சுணக்கமாக உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கவலையுடன் தெரிவித்தனர்.