மாவட்ட நிர்வாகத்துடன் குறுக்கு வழியில் தொடர்பு கொள்ள ஆளுநர் முயற்சிக்கவில்லை என்று ஆளுநரின் முதன்மைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார். சட்ட விதிப்படியே அனைத்தும் செய்யப்பட்டதாகவும் ஆளுநரின் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

Special Correspondent

கோவையில் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்ததில் சட்ட மீறல் ஏதும் இல்லை என்றும் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்றும் கோவையியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுவதாக கூறுவது கற்பனையான புகார் எனவும் கூறியுள்ளார். ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்தின்படி சரியானதுதான் என செயலர் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை எதிலும் அரசியல் சார்பாக இருக்காது என்றும் செயலர் அறிக்கையிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற்றுத்தரவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார் எனவும் முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.

அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை ஆளுநர் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் ஆளுநரின் செயலர் கூறியுள்ளார். ஆளுநர் நடவடிக்கை சரியாக இருப்பதால் தமிழக அமைச்சர்கள் பாராட்டியுள்ளனர் என்று அளுநர் முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சி, நலத்திட்டங்களை அறிய சந்திப்பு உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் மத்திய அரசின் தூண்டுதல் பேரில் ஆளுநர் செயல்படவில்லை என்றும் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மோடி வகுத்த பாதையில் ஆளுநர்கள் நாங்கள் செயல்படுகிறோம் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

புதுவை காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி ஜனாதிபதியும் ஆய்வுகளை மேற்கொண்டால் மோடி அரசு அதனை எற்று கொள்ளுமா என்று எழுப்பிய கேள்வியும் பிஜேபி கட்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது...