இன்று (நவம்பர் 20) ஆஸி., நேரப்படி காலை 9.43 மணிக்கு நியூ கலிடோனியா அருகே பலமுறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

Special Correspondent

பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்ட தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கி உள்ளன.

இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், தீவிர சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய 300 கி.மீ., பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலஅதிர்வு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

சென்ற வாரம் ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக ஈரான் ஈராக் எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து நானுறுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் ஆயிக்கணக்கில் காயம்பட்டதும் குறிப்பிடத்தக்கது.