ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் தனியாக ஒரு அறை உள்ளது. அங்கு தான் அவர் தங்கி ஜெயலலிதாவிற்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரின் அறைக்கு சென்ற அதிகாரிகள்பல மணி நேரமாக சோதனை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரமாக போயஸ்கார்டனில் உள்ள சசிகலாவின் அறை, இளவரசி மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளிலும் சோதனை நடந்துள்ளது. சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் விவேக் அங்கு வந்தார். அவரிடம் ஜெயலலிதாவின் அறையின் சாவிகளை அதிகாரிகள் சோதனையிட கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து விட்டார்.சுமார் 5 மணி நேரமாக போயஸ்கார்டனில் உள்ள சசிகலாவின் அறை, இளவரசி மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளிலும் சோதனை நடந்துள்ளது. சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் விவேக் அங்கு வந்தார். அவரிடம் ஜெயலலிதாவின் அறையின் சாவிகளை அதிகாரிகள் சோதனையிட கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து விட்டார்.
ஆனால் அதிகாரிகள் ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றன் பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், லேப் டாப் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் கம்ப்யூட்டரில் தகவல்கள் சேகரிக்கப்படும் ‘‘ஹார்டு டிஸ்க்’’-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான தகவல்கள் இருந்துள்ளன. குறிப்பாக, பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த முக்கிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது.
மேலும் சசிகலாவின் உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள், முதலீடுகள் பற்றியும் அதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், வருவாய்கள் குறித்த உண்மையான விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
சசிகலா போயஸ் தோட்டத்தில் இல்லாத 2011~2012 காலத்திலே ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்ட மொத்தம் 13 கம்பெனிகள் ., மிடாஸ் சாராய ஆலை உள்ளிட்ட சொத்துகளை ஒரு வருடம் டெண்டர் இல்லாமல் #டாஸ்மாக் மூலம் துக்ளக் ஆசிரியர் மற்றும் அவர் மகன் பராமரித்து வந்தார் என்பதால் சோவின் குடும்பம் ஊழலும் வெளி வருமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
அதே சமயம் பிரதமர் மற்றும் RSS நெருக்கமாக உள்ள சோ குடும்பத்தை சிக்க வைப்பது கடினம் என்றும் ஒரு வேளை ஆட்சி மாறி விசாரணை நேர்மையாக நடந்தால் அவர்களும் சிக்குவார்கள் பெயர் சொல்ல விரும்பாத வருமான வரி துறை அதிகாரி கூறியதும் குறிப்பிடத்தக்கது...