சட்டமன்ற தேர்தலுக்கு குஜராத் மாநிலம் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த 22 வருடங்களாக குஜராத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக உள்ளது.
அண்மையில் அகமதாபாத் நகரில் பல முஸ்லீம் மற்றும் பால்டி பகுதியில் உள்ள அமன் காலணி, எலைட் ஃபிளாட்ஸ், டிலைட் ஃபிளாட்ஸ் மற்றும் சாஹ்லி ஃபிளாட்ஸ் போன்ற கட்டடங்கள் மீது சிவப்பு நிற குறியீடுகள் வரையப்பட்டிருந்தன.
பால்டி டிலைட் ஃபிளாட்ஸ் மீதும் இந்த செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டிருந்தது.
இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். அகமதாபாத்தின் ஆடம்பர பகுதியான பால்டியில் வணிகர்கள் மற்றும் மேல்தர மற்றும் நடுத்தர முஸ்லீம் குடும்பங்கள் அதிகம் வசிக்கின்றனர்.
பால்டி டிலைட் ஃபிளாட்ஸ் மீதும் இந்த செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டிருந்தது.
இவற்றால் அப்பகுதியெங்கும் பலவிதமான வதந்திகள் பரவின.அமர் காலனியை சேர்ந்த முபின் லகாடியா கூறுகையில், ''இதை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் இதனால் அச்சத்தில் உள்ளோம். எனது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டனர் என்று கூறினார்.
எலைட் காலனியின் பாதுகாவலர் கூறுகையில், " முதலில் இந்த சிவப்பு நிற குறியீடு சின்னத்தை பார்க்க விசித்திரமாக இருந்தது. ஆனால், இதே போன்று பல வீடுகளில் வரைந்திருந்ததைக் கண்டு பயந்துவிட்டோம்" என்றார்.
டிலைட் ஃபிளாட்சில் வசிக்கும் ஒவேஷ் சரேஷ்வாலா பிபிசியிடம் கூறுகையில் "யாராக இருந்தாலும் இந்த அச்சமிருக்கும். சிவப்பு நிற குறியீடுகள் , தாக்குதல் அல்லது பயங்கரவாதத்தைக் குறிக்கும். யார் எங்களை தாக்க நினைக்கிறார்கள்?" இதுகுறித்து காவல்துறையினருக்கு கடிதம் எழுதி உதவி கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதனை விசாரிக்க உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் அப்பகுதிகளில் பதற்றம் உண்டாகியது. இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு அப்பகுதிவாசிகள் கடிதம் எழுதினர்.
மாநகராட்சி பணியாளர்கள் இவற்றை வரைந்துள்ளதை போலீசார் கண்டுபித்துள்ளனர். தற்போது இந்த குறியீடுகளை நீக்கிவிட்டு மாநகராட்சி அவ்விடத்தில் வெள்ளையடித்துள்ளது.
''மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளை அடையாளம் காண இவ்வாறு சின்னங்களை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக முஸ்லீம் குடியிருப்புகள் என்றில்லை பல இந்து சமூக குடியிருப்புகளிலும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்துக்காக மாநகராட்சி பணியாளர்கள் இவ்வாறு செய்தனர்'' என்று அகமதாபாத் போலீஸ் ஆணையாளர் ஏ.கே. சிங் விளக்கினார்.
பால்டியை ஜுஹபுராவாக (ஜுஹபுரா, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய சேரிகளில் ஒன்று) மாற்றுவதை நிறுத்த வேண்டும் என எழுதப்பட்டிருந்த சில சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளும் இருந்தன. எனவே இந்த சுவரொட்டிகளுக்கும், சில இடங்களில் வரையப்பட்டுள்ள செஞ்சிலுவை சின்னங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. சிங் கூறியுள்ளார்.