இந்தியாவில் மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை இன்றும் இந்தியா முழுவதும் இருக்கிறது. கிட்டத்தட்ட 5.3 கோடி கழிப்பறைகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருப்பதாக தூய்மை இந்தியா இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்திய அரசின் அழைப்பை ஏற்று, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமைகளின் ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் லியோ ஹெல்லர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்பட்ட ஆய்வின் கடைசி நாளில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திட்ட முடிவு அறிக்கையில் தெரிவித்த விவரம் :

Special Correspondent

கிராமப்புறம் மற்றும் நகர்புறப்பகுதிகளில் இன்னமும் கையால் மலமள்ளும் அவலம் நீடிப்பதைச் சுட்டிக்காட்டினார். அதனால்தான் தூய்மை இந்தியா திட்டம் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

மோடி அரசினால் திறந்த வெளி கழிப்பிடமில்லா இடம் என்று சான்று அளிக்கப்பட்ட பல இடங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதை தான் கண்கூடாக பார்த்ததாக ஹெல்லர் கூறியிருக்கிறார்.

“காந்தியின் கண்ணாடி சின்னத்தை நான் சென்ற எல்லா இடங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தில் பார்த்தேன். திட்டத்தின் மூன்றாவது ஆண்டில் அதை மனித உரிமைகளுக்கான கண்ணாடியாக மாற்றுவதற்கான நேரம் இது” என்று ஹெல்லர் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.

மேலும் தகவல், கல்வி மற்றும் தொழில்நுட்ப (IEC) வழிமுறையானது சரியாக பின்பற்றப்படவில்லை. வெறுமனே நிதியை ஒதுக்குவது மட்டுமே போதாது. இந்திய அரசு IEC மூலம் தூய்மை இந்தியா திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பிஜேபி அரசின் மோடியின் அரசாங்க அதிகாரிகள் அவரை விமர்சித்து பின் வரு கருத்துகளை தெரிவித்து உள்ளார்கள் :

மனித உரிமைகளின் முன்னோடி மகாத்மா என்பதை உலகம் அறியும் என்றும் தூய்மை இந்தியா சின்னத்தை மாற்ற சொன்னது தேச தந்தையை அவமதிப்பதாகும் என்றும்,

இந்தியாவின் சில மாநிலங்களில் அதுவும் வெறும் இரண்டே வாரங்கள் மட்டுமே பயணம் செய்து திரட்டிய துண்டு துண்டான விபரங்களை வைத்து தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சிப்பது சரியல்ல என்றும் கூறி உள்ளார்கள்.

தூய்மை இந்தியா திட்டம் ஒரு கண் துடைப்புத் திட்டம் என்பதை சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் அம்பலப்படுத்தியதில் ஒரு சிறு பகுதியையே ஹெல்லரின் இரண்டுவார ஆய்வறிக்கை தெரிவித்து இருப்பதாக கூறிய சமூக ஆர்வலர்கள்,

மேலும் மனித உரிமைகளின் ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் நிபுணரை அழைத்து விட்டு அவர் கூறிய யோசனையை ஏற்காமல் அரசே அவரை விமர்சிப்பது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.