டில்லியில் ஆம்ஆத்மி கட்சி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு சேவை செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியது, வீடு தேடி சென்று 40 வகையான சேவைகள் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
முதல் கட்டமாக ஜாதி சான்று, குடிநீர் குழாய் இணைப்பு அனுமதி சான்று, புதிய ரேசன் கார்டு வழங்குதல், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், திருமணப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 10 சேவைகள் வழங்கப்பட உள்ளது.
எஞ்சியுள்ள 30 சேவைகள் இரண்டாம் கட்டமாக வழங்கிட உள்ளது. இத்திட்டம் அடுத்த வருடம் முதல் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த சேவையின் கீழ் பொதுமக்கள் வீடு தேடி சென்று அவர்களிடம் தேவையான ஆவணங்களை பெற்று தர தனியார் ஏஜென்சிகள் பயன்படுத்தப்படும் என்றார்.