பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ், பா.ஜ., மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

Special Correspondent

அவர் பேசுகையில், பா.ஜ.க, அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் வெறியில் உள்ளது. அதனால் எதிர்ப்புக்களை வாயடைக்க வைக்க முயற்சித்து வருகிறது. மக்கள் யாரும் அவர்களுக்கு எதிராக பேசக் கூடாது என நினைக்கிறது..

சமீப காலமாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசும் ஷாருக்கான், அமீர் கான் போன்றோரும், என் போன்றோரும் ஓரங்கட்டப்படுகின்றனர்...

விளம்பர தூதர் பதவி பறிக்கப்படுகிறது. அவர்களுக்கு வரும் விளம்பர வாய்ப்புக்களம் தடுக்கப்படுகிறது. பசுவிற்காக நீங்கள் சட்டம் கொண்டு வருகிறீர்கள். ஆனால் அதற்காக சில மனிதர்களை கொல்கிறீர்கள்...

பொது இடங்களில் அமர்ந்திருக்கும் ஜோடிகளை மிரட்டுகிறீர்கள். கல் எறிகிறீர்கள், அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறீர்கள். நீங்கள் என்ன நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா?

பா.ஜ.க,வுக்கு ஓட்டுப் போட்டதன் தவறை மக்களை உணர்ந்து தான் அவர்களில் பெரும்பாலானோர் அமைதியாக உள்ளனர்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அப்படி அவர்கள் அரசியல் கட்சியில் சேர்ந்தால் புகழ்பெறலாம். ஆனால் அது நாட்டிற்கு பேரழிவை தான் தரும். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்...

ஹிந்துத்வ எதிர்ப்பாளர் பெண் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பின்னர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால் அவர் மீது வழக்குகளை பல இடத்திலே போட்டு பிஜேபி வினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்...

விவசாயி டெல்லி போராட்டத்தில் தனது ஆதரவை தனது அதில் ஒரு நாள் விவசாயி தலைவர் அய்யாக்கண்ணு உடன் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது...