டியாங்காங் -1 என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை சீனா, 2011ம் ஆண்டு அக்டோபர் முதல், விண்வெளியில் பராமரித்து வந்தது. 2016ம் ஆண்டுக்கு பிறகு அதன் மீதான கட்டுப்பாட்டை தரைநிலையம் சீனா இழந்துவிட்டது.

Special Correspondent

கைவிடப்பட்ட இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் அடுத்த நில மாதங்களில் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கனவே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

8.5 டன் எடை கொண்ட டியாங்காங்-1, பூமியை நோக்கி விழும் வேகத்தில் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து சிதைந்துவிடும் என்றும் சிதைகூளங்கள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக 100 கிலோ எடை கொண்ட துண்டு விழ வாய்ப்பிருந்தாலும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில பூமியின் மீது விழும் என்றும், 43 டிகிரி வடக்கு மற்றும் 43 டிகிரி தெற்கு ஆகிய இரண்டு அட்சரேகைகளுக்கு இடைபட்ட பகுதியில் விழும் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த அடிப்படையில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், பெய்ஜிங், டோக்கியோ, இஸ்தான்புல், ரோம் ஆகிய முக்கிய நகரங்கள் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.