தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா நடைபெற்றது .
இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வந்து விழாவை சிறப்பித்து பத்திரிகையை வாழ்த்தி பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் 12-30 மணிக்கு கோபாலபுரம் சென்றவர் அங்கு தி.மு.,க தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு முடிந்து சுமார் அரைமணி நேரம் கழித்து வெளியே வந்து தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தது தான் ஹை லைட் ட்விஸ்ட் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்...
பிரதமருடன் தமிழக ஆளுநர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைசர் பொன் ராதாகிருஷ்ணன் திமுக தலைவர் வீட்டுக்கு சென்றனர் .
இது குறித்து தி.மு.க எம்பி டிகே எஸ் இளங்கோவன் கூறிய கருத்து :
திமுக தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் கருணாநிதி என்ற முறையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் காலை 10.45 மணி அளவில் கலைஞரின் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் வீட்டு வாசலில் காத்து இருந்தனர்...
உட் கட்சி பிரச்சனை , கூட்டணி கட்சி சிவசேனை பிரச்சனை மற்றும் மற்றும் வட இந்தியாவில் தொடந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முதல் முறையாக சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது வந்து குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.