உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் 'ஹிந்தி இதழியல் தினம்' புதனன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக அவர் பேசியிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Special Correspondent

நிகழ்வில் அவர் விவரம் "மகாபாரதத்தில் வரும் புராண கதாபாத்திரமான சஞ்சயன் ஹஸ்தினாபுர அரண்மனையில் அமர்ந்தபடியே, பார்வையற்ற மன்னர் திருதிராஷ்ட்ரனுக்கு, குருஷேத்ர போர் காட்சிகளை பறவைப் பார்வையில் எடுத்து உரைக்கிறான்.

இது நேரடி ஒளிபரப்பு இல்லை என்றால் வேறு என்ன?

உங்களது கூகுள் இப்பொழுதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் எங்களது கூகுள் வெகுகாலத்திற்கு முன்னமே செயல்படத் துவங்கி விட்டது.

மேலும் நாரதர் ஒரு தகவல் களஞ்சியம். அவர் 'நாரயணா என்று மூன்று முறை உச்சரிப்பதன் வாயிலாக, உலகின் எந்த இடத்திற்கும் விரைவில் செல்ல முடியும். அதே போல தகவல்களையும் பரிமாற முடியும்".

இவ்வாறு அவர் பேசினார். பாஜக தலைவர்கள் இவ்வாறு பேசி சர்ச்சையில் சிக்குவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையான சம்பவமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.