தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது படுகாயமடைந்த பொதுமக்களை இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். வரிசையாக அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிவந்தார்.
அப்போது ஒரு இளைஞரிடம் ரஜினி வந்து நலம் விசாரித்தபோது, யார் நீங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ரஜினி என அவர் பதிலளிக்க.. அது எங்களுக்கு தெரியாதா? நீங்க தான் ரஜினின்னு யாருக்கும் தெரியாமல் இல்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக நாங்கள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்தில் இருந்ததா? என சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதனை கண்டு அதிர்ந்து போன ரஜினி அங்கிருந்த மெதுவாக சிரித்துக்கொண்டே நழுவி சென்றார்.
இந்தக் காட்சிகள் செல்போனில் படமாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ரஜினியிடம் கேள்வி எழுப்பும் இளைஞரைப் பலரும் பாராட்டிய நிலையில், அந்த வீடியோ குறித்த மீம்களும் பரவத் தொடங்கியிருக்கின்றன. அதோடு சேர்த்து தற்போது #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.