தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறுஉடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Special Correspondent

ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறு உடற்கூறாய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீதம் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஒரு வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் வழக்கை ஜூன் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் பாஸ்கர், டீக்காராமன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 13 பேர் உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.