இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மோசடியில் ஈடுப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6461 கோடி இழப்பை சந்தித்து முதல் இடத்திலும், ரூ.2390 கோடி இழப்புடன் எஸ்பிஐ வங்கி 2-ம் இடத்திலும் உள்ளன.
21 வங்கிகளில் மொத்தம் ரூ.25,744.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விஜய் மல்லையா உள்ளிட்டோர் வங்கிகளில் பணம் பெற்று மோசடி செய்ததாலும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குறைந்த வைப்பு இல்லாமல் இருக்கும் கணக்கில் 8230 கோடிக்கு மேலே வருவாய் வந்தாதாக அறியபடுகிறது