தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

Special Correspondent

இந்த சமயத்தில் உலகிலேயே சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரள மாநிலம், கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தைப் பார்வையிட வந்த ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டங்களின் தலைமை இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம், செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார்.

Special Correspondent

அவரிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.

போராட்டங்கள் வன்முறையின்றி நடைபெற வேண்டும். போலீஸார் அடக்குமுறைகளைக் கையாளக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியது சர்வ்தேச கவனத்தை பெற்று விட்டேதே துப்பாக்கி சூடு என்று வேதாந்தா குழுமத்தை அதிர்ச்சியில் ஆழ்தியது...

இது போதாது என்று லண்டன் வசிக்கும் தமிழர்கள் லண்டனில் அனில் அகர்வால் வீட்டு முன் முற்றுகை காரணமாக லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் தொடர் செய்தி வெளியிட்டு வருகிறது.

இதையடுத்து பிரதான இங்கிலாந்தின் லேபர் எதிர்கட்சி வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற கோரிக்கைவைத்துள்ளது...

மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதனால் பாதிப்பு அடைந்த வேதாந்தா குழுமத்தின் 71 சதவீத பங்குகளை வைத்துள்ள அதன் தலைவர் அனில் அகர்வால் இது வெளிநாட்டு சதி என்று டுவிட் செய்து புலம்பியுள்ளார்...

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டை நியாப்படுத்துவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களின் உடல்களை போலீஸ் இழுத்து வரும் வீடியோ வெளியாக உள்ளன. சீருடை அணியாத போலீஸ் குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் காட்சி வெளிவந்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தை வழிநடாத்தியவர்கள் குறி வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி மீதும் கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் முதல்வர் டிஜிபி., ஐஜி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.