சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உதயம் மனோகரன், மில்லர், பார்வேந்தன், உட்பட மதுரை, நெல்லை, திருச்சி இன்னும் பல நகரங்களில் இருந்து பல குழுக்களாக 60 வழக்கறிஞர்கள் நேற்று தூத்துக்குடி சென்றனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி சென்றதால் அங்காங்கே கும்பலாக இருந்த போலிஸார் தடுக்கவில்லை... ஆனால் தூத்துக்குடி ஆள் நடமாற்றம் அற்ற சுடுகாடு போல் உள்ளது.
நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கு முன்பு சாதிரீதியாக பிரிந்து இருந்தன... இந்த படுகொலைக்கு பின் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைந்து வழக்காடினர். மாவட்ட நீதிபதியிடம் ஆள் கொணர் மனு போட்டு ஆர்டர் வாங்கினர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உட்பட பல இடங்களில் அடைக்கப்பட்டு கிடந்த தூத்துக்குடி மக்கள் 65 பேரை அப்பொழுதுதான் கைது செய்ததாக பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் கொண்டு வந்தனர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்...
தூத்துக்குடி மருத்துமனை முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டு உள்ளது. தலை, மார்பு, தொடை, விலா எலும்பு என்று குண்டடிப்பட்டு 45 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் கூற்று படி மக்கள் அமைதியாக அறவழியில்தான் பேரணியாக சென்றனர். போலிஸ் திட்டமிட்டு தூப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது. 10 வது படிக்கும் மாணவி முழக்கங்கள் போட்டார் என்பதற்காக பிஸ்டலை வைத்து வாயில் போலிஸ் அதிகாரி சுட்டு கொலை செய்து உள்ளார்...
போலிசார் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் பலர் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தனர்... அவர்களை மருத்தமனைக்கு தூக்கு செல்லாமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர். குண்டடி பட்ட ஒருவர் அருகில் உள்ள மருத்தவமனைக்கு செல்ல அங்கு வந்த போலிஸ்காரன்கள் அவரை அடிக்க முயன்றனர். செவிலியர்கள் போலிஸ்கார்களிடம் மன்றாடி கையெடுத்து கும்பிட்டு அவரை காப்பாற்றினர்...
மேலும் இஸ்லாமிய சகோதரர்களின் ஆம்புலன்ஸ்சில் வந்துதான் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தவர்களை மனித நேயத்துடன் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர்...
75 வயது மூதாட்டி இது வரை பல சாதி கலவரங்களை பார்த்துள்ளேன் ஆனால் இப்படியான போலிஸ் வெறியாட்டம் தனது வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றார்.
குண்டடி பட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்... புற்றுநோயால் சாவது. போராடி சாவது என்பதுதான் அது. நான் இறந்தால் என் மனைவி போராடுவாள் என்று குண்டடிபட்ட தூத்துக்குடி வாசி உறுதியாக சொன்னார்.
மயான அமைதியை கலைக்க தூத்துக்குடி யின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு சட்டரீதியாக உதவிகள் என்ன என்ன செய்வது என்று கூறிவிட்டு 60 வழக்கறிஞர்கள் திரும்பினோம்.
தகவல் உதவி : கி. நடராசன், வழக்கறிஞர்.