தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Special Correspondent

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், முடக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களை பார்வையிட்டு காயங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஏ.பக்பி.சூரியபிரகாசம் மே 23, 24 தேதிகளில் தமிழக அரசுக்குக்கும், சிபிஐ-க்கு மனு அனுப்பி இருந்தார். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததால், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Special Correspondent

இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் இன்று விசாரித்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி காயமடைந்த பொதுமக்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கவே இணைய சேவை முடக்கப்பட்டதாகவும், இயல்புநிலை திரும்பி வருகிறது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள் இயல்புநிலை திரும்புகிறது என்றால் ஏன் இன்னும் முடக்கியுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், எழுதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இணைய சேவை 5 நாட்களுக்கு முடக்கப்பட்டதாகவும், அதில் மூன்று நாட்கள் முடிவடையப்போகிறது என்று தெரிவித்து, பொறியியல் படிப்பு விண்ணப்பத்திற்கான தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகத்தின் கடித தொடர்பை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

ஆனால் தூத்துக்குடியில் இணைய தள சேவை முடக்கம் குறித்து மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தேவை என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேல் சிகிச்சை தேவைப்படுவோரை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, அமைதி திரும்ப நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளது.

சட்ட உதவி மையம் எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 6-ல் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் 6 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நிலைமையை கண்காணித்து ஐஏஎஸ் அதிகாரிகள் டேவிதார், ககன் தீப் சிங் பேடி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரம் அறிய :