ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு பாதிப்புகள் இருக்கிறது என்பது நாம் அறிந்த நிலையில், நிறுவனத்தின் உற்பத்தி அளவை 8 லட்சம் டன்னாக உயர்த்தத் திட்டமிட்டு வரும் செய்தி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Special Correspondent

இதன் வாயிலாகவே மக்களின் போராட்டம் வெடித்தது. இந்த நிறுவனத்தின் இப்பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் வளம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் சில அமைப்புகள் அரசின் விதிகளை மதிக்காமல் புகைபோக்கி (chimney) உயரவும் குறைவாக வைத்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை, இதனால் காற்று மாசுபாடு இப்பகுதியில் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் இந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒடிசாவில் பாக்சைட் ஆலையை அமைப்பதற்காக, ஒரு பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை இவருடைய நிறுவனம் அடித்து துரத்தியது. இது தொடர்பான வழக்கை 2005ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த ஆலை அமைக்க தடை விதித்தது என்பதும் குறிபிட்டதக்கது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் மட்டுமல்ல லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Special Correspondent

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தை எதிர்த்து, லண்டனில் வசித்து வரும் அதன் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக லண்டனில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

லண்டனில் அனில் அகர்வால் வீடு முன்பாக ஒன்று திரண்ட தமிழர்கள் கொலைகார அனில் அகர்வால் இந்த வீட்டில்தான் இருக்கிறார் என முழக்கங்கள் எழுப்பினர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி போராட்டத்தின் எதிரொலியாக வேதாந்தா நிறுவனப் பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் 7 சதவீதமும், லண்டன் பங்குச்சந்தையில் 11.52 சதவீதமும் சரிந்துள்ளது.

Special Correspondent

நேற்று லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தாவின் பங்கு 11.52% வீழ்ந்திருக்கிறது. தூத்துக்குடி படுகொலைகள் மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது. ஆயினும், இது தான் நம்முடைய குறியாக இருத்தல் வேண்டும்.

தேசிய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் போதும் வேதாந்தா நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் 11.48 மணிக்கு இதன் சரிவின் அளவு 0.53 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் சமுக வலைத்தளம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தக அமைப்புகள் மத்தியில் வேதாந்தா பங்குகளை வாங்க வேண்டாம் என்றும் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஜாம்பியா நாட்டிலும், தாமிர தாதுக் கழிவுகளை அங்குள்ள ஆற்றில் கொட்டியதாக அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், அந்த ஆலையும் மூடப்பட்டது. சட்ட விதிகளை மீறுவது என்பது அனில் அகர்வாலுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று, அது தொடர்பான வழக்கை விசாரித்த ஜாம்பியா நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நாசக்கார தொழிற்சாலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 14 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். இது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை மட்டும் அல்லாமல் மனிதநேயம் உள்ள அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Special Correspondent

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. வேதனையளிக்கிறது. இது எதிர்பாராதது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க கோர்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். அரசு மற்றும், நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றினோம். கடமையை உணர்ந்த சமூகம் நாங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக தொழில் துவங்கினோம். தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.