ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.
இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரையும், எஸ்பி-யையும் பணியிட மாற்றம் செய்துள்ளது அரசின் கண்துடைப்பு நடவடிக்கை என்றார்.
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கொந்தளிப்பாக உள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். சாதாரண உடையில், பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.
செயலற்ற தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் .சென்னை தலைமை செயலக 4-வது வாயில் முன்பு அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். முதலமைச்சர் அறை முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு போலீசே காரணம் எனக்கூறி திமுகவினர் முழக்கமிட்டனர்.
தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள், தலைமைச் செயலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகம் அருகே 3000 க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினரின் போராட்டத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னை தலைமை செயலகம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம் எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். திமுகவினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஸ்டாலினை போலீசார் வாகனத்தில் கொண்டு செல்லவிடாமல் திமுகவினர் தடுத்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அமைச்சர் ஜெயக்குமார் இல்லை அவர் பொய் குமார் என்றும் தெரிவித்தார்.
மேலும் தன்னை துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டுகளை நெஞ்சில் தாங்க தயார் என்றார் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.
அங்கு அதிக அளவில் திமுக.வினர் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் ஸ்டாலினை கைது செய்து அழைத்துச்செல்ல முடியாமல் போலீஸ் திணறினர்.
திமுகவினர் குவிந்துள்ள தலைமைச் செயலக பகுதியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்த நிலையில் ராயபுரத்தில் தி.மு.க.வினர் சாலையில் படுத்தபடி மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு மேலும் பதிக்கப்படும் என்பதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர்களை போலீசார் சற்று முன் விடுவித்தனர்.
இதன் இடையே ஆய்வு குழு கூட்டம் முடிந்தபின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபாநாயகர் அறையில் 11மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டார். தொலைக்காட்சியில் பார்த்தால் முதலமைச்சர் தன்னை சந்திக்க வந்த ஸ்டாலினை பார்க்க மறுத்ததாக செய்திவந்தது. வேண்டுமென்றே திட்டமிட்டு கூட்டம் நடைபெற்ற சமயத்தில் தவறான செய்தியை ஸ்டாலின் பரப்பியிருக்கிறார். அல்லது அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்ததும் என்னை சந்தித்து பேசியிருக்கலாம்.
என்னை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறவில்லை.முதலமைச்சரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் தவறான செய்தியை பரப்புகிறார்.
பரபரப்பான செய்திகளுக்காக இது போன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மு.க. ஸ்டாலின். அரசியல் நாடகம் நடத்தவே என் அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது. எதிர்க்கட்சிகள்,சில இயக்கங்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல.தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது விஷமிகளும், சில கட்சி தலைவர்களும் மக்களை திசை திருப்பினார்கள் .144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது; கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும் என்றார்.
இதே முதல்வர் 144 தடை உத்தரவு மெரினாவில் அமலில்இருக்கும் போது ஜெயலலிதா நினைவு ஊர்வலம் சென்றதும்., ஹிந்த்துவ அமைபப்புகள் ரத யாத்திரை நடத்தும் போதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததும் குறிப்பிடதக்கது.
மேலும் முதவரிடம் நிருபர்கள் யார் சுட உத்தரவு போட்டதுன்னு கேட்டவுடன் பதில் அளிக்காமல் ஒட்டம் பிடித்தார். இதை கண்ட நிருபர்கள் இப்படி பதில் சொல்லாமல் ஒடுகிறாரே என்றபடி புலம்பி சென்றனர்.