தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், உடல்களை உறவினர்கள் கேட்பதாக கூறியது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த கோர்ட், உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றமில்லை. தமிழக அரசின் கோரிக்கை குறித்து மனுதாரர் விளக்கமளிக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. கிராம மக்களின் போராட்டம் வன்முறையாக மாற என்ன காரணம்? 10க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கிச் சூடு நடந்தது ஏன்? இது குறித்து தூத்துக்குடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி. கூறியதாவது, நிர்வாகத் திறமை தோல்வி அடைந்ததே இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு, உயிர் பலிகளுக்குக் காரணம் என்கிறார். மாவட்ட புலனாய்வுத் துறையின் தகவல்கள் ஒன்று திரட்டப்படாமல் விட்டதும், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையின் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்து, துப்பாக்கிச் சூட்டுக்கு வழிகோலிவிட்டது என்று கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் மக்கள் நெடு நாளாக போராடி வருகிறார்கள். இதனை சரி செய்ய ஸ்டெர்லைட் ஆலையும் தவறியுள்ளது. அதன் தொடர்ச்சிதான் இன்று இந்த மோசமான சம்பவத்துக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.
இது மட்டுமல்ல, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு மிகவும் திறமையான, அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகளையே பணியமர்த்த வேண்டும். அதாவது, 6 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட அதிகாரிகளைத்தான் தூத்துக்குடியில் பணியமர்த்தியிருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே இதுபோன்ற சூழ்நிலையை கையாள முடியும். ஆனால் தற்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் தாண்டி, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்கிறார் அவர்.
பொதுமக்கள் நிறைந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் 2011ம் ஆண்டு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
இது பற்றி சென்னை பல்கலையின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துக் கொடுத்துள்ள எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு செய்ய வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் படிக்க :இது SLR-7.62 mm, assault rifle (Self Loading Rifle) இந்த துப்பாக்கியால்