12 பேர் நெஞ்சில் குண்டு வாங்கி மரணம் 70 பேர் மிகவும் கவலைக்கிடம் என்ற நிலையில் ஒரு வட இந்திய ஹிந்தி வியாபாரி அனில் அகர்வாலுக்கு இன்னும் எத்தனை உயிர் வேண்டும் என பாஜக மற்றும் அதிமுகவை நோக்கி சமூக வளைதளத்திலே கேள்விகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஒருவரிடமும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் இல்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரிய அளவில் கற்கள் கிடைக்கவும் வாய்ப்பில்லை. பின்னர், எப்படி, வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது என்றும் கேள்விகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆட்சியர் அலுவலக கண்ணாடிகளை உடைத்து தீ வைத்தது யார் என்றும்..,
இது SLR-7.62 mm, assault rifle (Self Loading Rifle) இந்த துப்பாக்கியால், முட்டிக்கு கீழே சுட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இதன் மூலம் சுட்டால் 500 Mtr ரேஞ்சில் உள்ளவர்களுக்கு மரணம் நிச்சயம், அதற்க்கு மேல் 850 Mtr வரைக்கும் மிகமோசமான பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
இந்த துப்பாக்கியால் பொதுஜன போராட்டத்தில் சுடுவதற்கு யார் உத்தரவு கொடுத்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்றும்.,
துப்பாக்கியின் ரேஞ்ச் எபெக்ட் தெரிந்து கொண்டே தூரத்தில் இருந்து சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் குறிப்பிட்ட நபர்களை தூரத்தில் இருந்தே தூக்கிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் துப்பாக்கி சூடு என்ற பெயரால் "கொலை" செய்துள்ளார்கள் என சொல்கிறார் முன்னாள் ராணுவ வீரர் தினகரன் அரசு.
மேலும் கலவரத்தை அடக்க இரண்டு தினங்களுக்கு முன்பே சூட்டர்ஸ் டீம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற தகவலால் விஸ்வரும் எடுக்கிறது SLR-7.62 mm, assault rifle துப்பாக்கி சூடு.
இப்போதும் இதறக்கு ஆதரமாக மாவட்ட கலெக்டர் சூட்டர்ஸ் டீம் உடன் எடுத்து கொண்ட படம் வைரலாக பரவியும் வருகிறது.
இந்த நிலையில் #TNJallianwalabagh ஹாஷ்டக் டிரண்ட் ஆகி உள்ள நிலையில் எதிர்கட்சிகள் அனைவரும் துப்பாக்கி சூட்டை கண்டித்து வருகின்றனர்.
தமிழர்கள் #RSS சித்தாந்தத்திற்கு அடிபணியாததே துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என்கிறார் ராகுல்காந்தி.
இது திட்டமிட்ட படுகொலை தான் துப்பாக்கி சூடு என்றும், இதன் காரணமாக 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்துள்ளது திமுக.
நாளை தூத்துக்குடி செல்வேன் என கூறிய மேற்கு வஙக முதல்வர் மம்தா அதிரடி முடிவால் தமிழக அரசும் மோடி அரசும் குழப்பம் அடிந்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் 12பேர் நெஞ்சில் வாங்கி மரணம், 70பேர் கவலைக்கிடம். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரனைன்னு சொல்ல என்ன கொழுப்பு என்றும் சமூகவலைதளத்தில் சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர்.
மேலும் தகவல்களுக்கு: கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி வேடிக்கை பார்க்கும் பாஜக அதிமுக அரசுகள்