மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ராமலிங்கம் சுதாகர் பதவியேற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Special Correspondent

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சுதாகருக்கு ஆளுநர் ஜெக்தீஷ் முகி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மணிப்பூர் முதர்வர், துணை முதல்வர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தவர். ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலிஜீயம் ராமலிங்கத்தை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்தது. இதையடுத்து மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகர் பதவியேற்றுள்ளார்.