இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மர்க்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Special Correspondent

திருமணத்தையொட்டி, பிரிட்டனில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திருமணத்தில்,மணமகள் மேகன் மார்கலின் தந்தை பங்கேற்கவில்லை.

ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை செய்துவைத்தார். இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இந்த அரச குடும்ப திருமண விழாவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Special Correspondent

புதுமண தம்பதியான ஹாரி-மெகன் தொடங்கவுள்ள புதிய வாழ்க்கைக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதேபோல் அரச குடும்ப திருமணத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலமான ஜேம்ஸ் கார்டன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமண விழாவிற்கு வந்த புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல் புகழ்பெற்ற ரக்பி வீரர் ஜானி வில்கின்ஸன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலிகளும் திருமண விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.