திருப்பதி ஏழுமலையான் கோயிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சலு உள்ளிட்டோரை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர பிராமண பரிஷத் தலைவருமான பெமூரி ஆனந்த சூர்யா தெரிவித்துள்ளார்.
திருமலை கோயில் நிதி கையாடலில் பெரும் முறைகேடு நடைபெறுவதாக தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சலு குற்றம் சாட்டிய விவகாரம் இப்போது அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அர்ச்சர்கர்களுக்கும் 65 வயதில் பணியில் இருந்து ஓய்வு அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது மேலும் இந்த பிர்ச்சனையை வளர்த்து விட்டது