கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பல்வேறு பரபரப்புக்கிடையே முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

Special Correspondent

தொடர்ந்து மைசூர் அருகே காங்., எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

Special Correspondent

மேலும் போலிஸ் காவலை விலக்கி விட்டு பாஜகவினர் நேரிடையாக ரிசார்ட் உள் வந்து கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசுகிறார்கள் என்று ஆதாரத்தோடு கூறி வருகிறார் காங்கிரஸ் முக்கிய புள்ளி ரமாலிங்க ரெட்டி.

Special Correspondent

இதனால் கர்நாடக காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏக்கள் சிறப்பு விமானம் மூலம் கொச்சி செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து இயக்ககம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்.

இதேபோல் ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் 37 பேரையும் குமாரசாமி சந்தித்து பேசினார். அப்பபோது பேசிய குமாரசாமி, குதிரை பேரத்தை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்தவே காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக உள்ளனர் என்றார்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரச்சனை இல்லை; பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதே முக்கியம் என்றார்.

இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் சென்றடைந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 3 பேரை தவிர மற்ற 75 எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் பயணம் செய்தனர். மதசார்பற்ற ஜனதா தளம் எம்.ஏ.க்கள் 37 பேரும் ஐதராபாத் சென்றடைந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ளது. விசாரணையின் போது எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமைக் கோரி வழங்கப்பட்ட கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவி்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு பிறகு எடியூரப்பாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிய வரும்.

இதன் இடையே பெரும்பான்மை இடஙகளை பெற்றதால் கர்னாடகம் போலவே கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தாங்கள் சார்ந்த மாநிலத்தின் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளதாக கோவா, மணிப்பூர் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநில சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதே உரிமை எங்களது கட்சிக்கும் உள்ளது. எனவே, நிதீஷ் அரசை கலைத்துவிட்டு, அரசு அமைக்க ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றார் தேஜஸ்வி.