தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு 01.03.2018 முதல் 06.04.2018 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620.
இவர்களில், பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் - 8,60,434
அதில் மாணவியரின் எண்ணிக்கை 4,60,255., மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.பொதுப் பாடப்பிரிவில் (General Stream) தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் (Vocational Stream) தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.
தேர்ச்சி பெற்றவர்கள் 91.1 சதவிதம் ஆகும் இதில் மாணவியர் 94.1 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களைவிட மாணவியரே 6.4 சதவிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம், மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்வெழுதியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்கள் (தமிழகத்தில் அமைந்துள்ள பள்ளிகள்)
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 6,754.
இதில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,907. இதில் 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். இந்த 2,574 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
இந்த வருடம் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலை விளம்பர படுத்த கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவெடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் யார் முதல் மதிப்பெண் என்ற தகவல் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களில் மதிப்பெண் சராசரி மட்டும் அறிவித்துள்ளனர். அதன்படி,
231 பேர் ( 1,180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
4,847 .பேர் 1,151 முதல் 1,180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
8510 பேர் 1,126 முதல் 1,150 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
11,739 பேர் 1,101 முதல் 1,125 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
71,368 பேர் 1,001 முதல் 1,100 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1,07,266 பேர் 901 முதல் 1,000 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1,43,110 பேர் 801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1,65,425 பேர் 701 முதல் 800 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
3,47,938 பேர் 700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.