கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அங்கு ஆட்சியமைக்க முடியும்.
இறுதி நிலவரப்படி 103 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்த தேர்தல் ஆனையம் காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.ஒரு இடத்தில் வக்களித்த ஓட்டுக்களை விட எண்ணிய ஓட்டுக்கள் அதிகமானாதல் அந்த ஒரு இடத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது...
இந்த சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்று காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் மூவரும் கூறியதாவது:
சித்தராமையா பேசும் பொழுது ‘கோவா உள்ளிட்ட மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்றது போல, கர்நாடகாவிலும் பாஜக முயற்சிகள் செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெற விட மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சிகுள்ளான பாஜக, மஜத தலைமைக்கு மிரட்டல் விட தொடங்கியுள்ளது.
இப்போது காங்கிரஸ் குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியே கொடுத்துள்ளது. இதனால் குமாரசாமி காங்கிரஸ் கட்சியோடு உடன்பட்டு ஆட்சி அமைக்க உள்ளார். கடுப்பான பாஜக டெல்லி தலைமை சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார் குமாரசாமி.