குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வடமாநிலங்களில் இருந்து 100 பேர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்திருப்பதாக வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞரை பகிர்ந்துள்ளார்.

Special Correspondent

இதைடுத்து போலீஸார் நடத்தி விசாரணையில் வாட்ஸ்அப்பில் வெளியானது வதந்தி என நிருபிக்கப்பட்டதால். வதந்தி பரப்பிய புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரை செய்யாறு அருகே அனக்காவூர் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் வீரராகவன் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் வதந்தியால் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். 4 மாவட்டங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவித்துள்ளது.

குழந்தை கடத்தல் வதந்தியால் கடந்த 2 நாட்களில் இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்கிற மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.