கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபைத் தொகுதியில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த போலி வாக்காளர் அடையாள அட்டைகள் மஞ்சுளா நஞ்சமுரி என்பவரின் பெங்களுரு வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த பெண் அவரின் மகன் ராகேஷ்க்கு வீட்டை வாடகை விட்டதாக கணக்கு காட்டி உள்ளார். மேலும் ராகேஷ் 2015 ஆம் ஆண்டு பாஜக தாமரை சின்னத்தில் நின்று காங்கிரஸ் இடம் தோற்றும் உள்ளார்...
இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மத்திய அரசு ‘மிட்நைட் டிராமாவை’ அரங்கேற்றி உள்ளது எனவும் குற்றம் சாட்டிஉள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது. மேலும், பாரதிய ஜனதாவிற்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
தேர்தலின் போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெருமளவு பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு இன்று தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேசியது, அப்போது பாரதிய ஜனதா இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைக்கும் விதமாக மத்திய அரசின் விசாரணை முகமைகள் உதவியுடன் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நாங்கள் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேசினோம். பாரதிய ஜனதாவின் முறைகேடு தொடர்பாக நாங்கள் ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்து உள்ளோம், வருமான வரித்துறை உள்பட மத்திய அரசு முகமைகள் உதவியுடன் பாரதிய ஜனதா இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைத்து, நள்ளிரவு சோதனையை மேற்கொண்டு சதிதிட்டங்களை முன்னெடுத்து வருகிறது,” என கூறினார். கர்நாடக தேர்தலில் தோல்வியை தழுவுவோம் என்ற அச்சத்தில் பாரதிய ஜனதா கட்சி பணத்தை வீசுகிறது, இதுபோன்ற மோசடியான செயல்களில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
முன்னதாக பிபிசி பெயரில் போலி கருத்து கணிப்பு வெளிட்டு பிபிசியிடம் குட்டு வாங்கியது பாஜக கட்சி என்பது குறிப்பிடதக்கது