சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 7-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது

Special Correspondent

இந்த அடிக்கல் நாட்டு விழாவாக பூஜைகளுடன் தொடங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Special Correspondent

ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் பல்வேறு கலைநயங்கள் கொண்ட வேலைபாடுகளுடன் கூடிய நினைவு மண்டபத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இந்த நினைவு மண்டபமானது ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்படவுள்ளது.இதில் ஜெயலலிதா ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கபட்ட முதன்மை குற்றவாளி என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மக்கள் பணம் விரயம் செய்ய்ப்பட கூடாது என்று சமூக வலைதளத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அப்படியும் மீறி காட்டினால் மெரினாவில் சீரணி அரங்கை ஜெயாலலிதா இடித்தது போல அடுத்த அரசு குற்றவாளியின் மணிமண்டபம் 50 கோடியை இடித்து தள்ளினால் மட்டும் போதாது அதனை அதிமுகவிடம் இருந்து வட்டி போட்டு வசூலிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்...

மேலும் சிலர் கிருஷ்ணசாமியும் கண்ணனும் இறந்து உடலைக்கூட அடக்கம் செய்யாத நிலையில் அதிமுக அரசு விழா எடுத்து 50 கோடி மக்கள் வரி பணத்தில் செய்கிறதே என்றும்,

மேலும் சிலர் ஜெயலலிதாவையே பிணமாக போட்டு அவரை முன்னாள் முதல்வராக்கி ராவோடு ராவாக பதவி எற்று சுகம் கணடவர்கள் அதிமுக அமைச்சர்கள் அவர்களிம் இதை எல்லாம் எதிர்பார்க்கலாமா என்றும் வினவியுள்ளார்கள்...