தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் போட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

Special Correspondent

பாஜக தேர்தல் பேரணிப் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சி PPP காங்கிரஸ் கட்சியாக மாறிவிடும். அதாவது பஞ்சாப் (punjaப்), புதுச்சேரி (Puducherry), குடும்ப (Parivar) காங்கிரஸ் என்றாகிவிடும் என கிண்டல் அடித்துள்ளார் .

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன், புழுதிப்புயல் ஏற்பட்டு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் உ.பியில் மரங்கள் வேறோடு பெயர்ந்து விழுந்தன. வீடுகள் பல இடிந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புழுதிப்புயலில் சிக்கி 73 பேர் பலியானார்கள். அடுத்த இரு நாட்களுக்கு புழுதிப்புயலும், மழையும் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சொந்த மாநிலத்தில் மக்கள் மழையிலும் புயலிலும் சிக்கி மடிந்து கிடக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். சொந்த மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அது குறித்து கவலைப்படாத முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்ததை அடுத்து வேறு வழியின்றி கர்நாடகாவில் இருந்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு உ.பி. புறப்பட்டார்.

இந்தநிலையில் பெலகாவி மாவட்டம் கிட்டூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மகந்தேஷ் பஷ்வந்தராயை ஆதரித்து, முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசிய விவரம் "கர்நாடக சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றிபெற, பாஜக தொண்டர்கள், ஓட்டளிக்காமல் இருக்கும் வாக்காளர்களின் கை, கால்களை கட்டி ஓட்டிசாவடிக்கு அழைத்து வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் "என்று கூறியுள்ளார்.

ஆதித்யநாத் செயல்பாடுகள் மற்றும் எடியூரப்பாவின் பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.