நாடு முழுவதும் 476 மருத்துவக்கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன. இதற்காக 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 2900 இடங்கள் உள்ளன. அதில் 1,07,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முன்னதாக 11% மட்டுமே அதிகம் பதிவு செய்வார்கள் என்றும் ஆனால் 31% அதிகபடியான மாணவர்கள் பதிவு செய்ததால் இதனால் 20% மற்ற மையத்துக்கு அனுப்ப வேண்டியது என்றாகி விட்டது என்றும் இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சிபிஎஸ்சி கை விரித்து விட்டதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் மாணவர்கள் கோரிக்கையை நிரகாரித்து விட்டது.
இதில் உச்ச்கட்ட கொடுமை., அதிமுக எடப்பாடி அரசு தனது வழக்கறினர்களை உச்சநீதிமன்றதுக்கு அனுப்பவே இல்லை. இதன் காரணமாகவே 15000+ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நீட் தேர்வு எழுதும் முடிவை தமிழக கிராமப்புற மாணவர்கள் பலரும் கைவிட்டுள்ளனர். ராஜஸ்தான் சிக்கிம் மாநிலங்கலுக்கு செல்ல முடியாததால் இந்ந சோக முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசின் பிடிவாத்தால் தங்களது மருத்துவக் கனவு கலைந்துவிட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது தங்களுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்களால் தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கியதையே மாணவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கியது பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பிடிவாதத்தால் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
10 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு எழுத தமிழகத்தில் இடம் உள்ள போது, நீட் தேர்வு எழுத இடம் இல்லையா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது என்று புகார் அளித்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக சிபிஎஸ்சி தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பாடத்தில் தேர்வுத்தாள் வெளியாகி மறு தேர்வு நடத்த போவதாக அறிவித்து பின்னர் மாணவர் போராட்டம் காரணமாக பின்வாங்கி அதை சிபிஎஸ்சி மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.