நீட் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த மாணவர்கள் ஆங்கிலம், இந்தி உள்பட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம். இந்த ஆண்டு உருது மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதால் 11 மொழிகளில் தேர்வு எழுத முடியும். அதனால், மாணவர்கள் எந்த மொழியை தேர்வு செய்துள்ளார்களோ அந்த மொழியில் தேர்வு எழுத முடியும். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியை தேர்வு செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மொழியில் உள்ள கேள்வித்தாள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ராஜஸ்தான் தமிழ் சங்கம், அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் முன்வந்துள்ளனர்.
அதில் கேரளா செல்லும் 5,371 மாணவர்களுக்கான உதவி எண்கள் வருமாறு:
1. திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
மோகனதாஸ்: 91 9447797910
கண்ணன்:91 9447722332
செந்திவேல்: 91 9995679166
2. கொல்லம் தமிழ் சங்கம்
விஜயராஜன்: 91 9447766980
3. புனலூர் தமிழ்சங்கம்
தனசேகரன்: 9447122016
4. சங்கனாச்சேரி திருவள்ளுவர் தமிழ் மன்றம்
வேணுகோபால்: 9447122678
5. கோட்டயம் தமிழ்க்காலை வளர்ச்சி மன்றம்
அபுபேக்கர்: 9846056662
6. கோழிக்கோடு தமிழ் சங்கம்
சோலையன்: 9495646085
பழனிவேலு: 9443671038
7. பாலக்கோடு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்
பேச்சுமுத்து: 9388197671
ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு...
நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது . உதவி பெற கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)