பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எடியூரப்பாதான் உண்மையிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி என கூறிவிட்டார்.

Special Correspondent

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் பிரச்சார களமும் களைக்கட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் பயணம் செய்து வரும் அமித்ஷா தேவனகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். ஊழல் மலிந்த ஆட்சிக்கு போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்பொழுது அமித்ஷாவுக்கு அருகில் தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார். அமித்ஷா கூறியதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அமித்ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டிக்காட்டினார். சுதாரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

பலரும் இதனை பகிர்ந்து #AmitShahQuotes #அமித்ஷா_உளறல்கள் என்ற ஹாஷ் டாக் செய்ததால் அது இந்திய அளவில் வைரல் ஆகியது.

இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையை உரக்கச் சொல்லிவிட்டார். நன்றி அமித்ஷா என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி அமித் ஷாபேசியது உண்மை என்றும் அப்படி அவர் பேசியது காங்கிரஸ்க்கு பரிசு என்றும் ட்விட் செய்து உள்ளார்.

கருத்து கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறிய நிலையில் இந்த விவகாரம் வெடித்ததால் பாஜகவினர் கடும் மனஉளச்சல் அடைந்து உள்ளதாக தெரிவித்தனர்