புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Special Correspondent

புதுவையில் பாஜகவை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன், திமுக நிர்வாகி தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் லட்சுமிநாராயணன் மனுதாக்கல் செய்துள்ளார். இதனிடையே சபாநாயகர் வைத்திலிங்கம் நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் உங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களை ஆலோசித்த பிறகு அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் புதுவை சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் நகலைக் காண்பித்தனர். மேலும், இன்று திங்கள்கிழமை கூட்டப்படும் சட்டப்பேரவையில் தங்களை அனுமதிக்குமாறும் கோரினர்.

இந்த நிலையில், சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரை, மாநில பாஜக துணைத் தலைவர் செல்வம் தலைமையில், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை சந்தித்தனர். அப்போது, 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பின் நகலை சட்டப்பேரவைத் செயலரிடம் அளித்தனர்.

இந்நிலையில், புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு உத்தரவை மீறி உள்ளே நுழைய முயன்ற 3 பாஜக நியமன எம்.எல்.ஏ,.க்களையும் பேரவைக்குள் நுழைய விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தி சட்டப்பேரவை காவலர்களுடன் 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடுத்து நிறுத்தப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பேரவைக்கு எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் தெருவில் போவோரும் "ஜெயிக்காம பின் வாசல்வழியே செல்வதற்க்கு ஆர்பாட்டம் பாரேன்" என்றவாறு சிரித்த படியே சென்றனர்".