பிரதமர் நரேந்திர மோடி பெயரில் உருவாக்கப்பட்ட நரேந்திரமோடி ஆன்ட்ராய்ட் ஆப்ஸில்(செயலி) பதிவு செய்யும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் சம்மதம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்க்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனது பெயர் நரேந்திரமோடி. நான் இந்தியாவின் பிரதமர். எனது அதிகாரப்பூர்வமான செயலி மூலம் உள்ளே நுழையும் போது, உங்களின் அனைத்து தகவல்களையும் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பர்களுக்கு அளித்துவிடுவேன். வழக்கம் போல முக்கியமான பிரச்சனையை மறைத்து சிறந்த சேவை செய்யும் மீடியாக்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் செயலி தனித்துவமானது. தொழில்நுட்பம் குறித்த விஷயம் எதுவும் ராகுல் காந்திக்கு தெரியாது. அவர் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் உருவாக்கப்பட்ட நரேந்திரமோடி ஆன்ட்ராய்ட் ஆப்ஸில்(செயலி) எப்படி தகவல்களை லீக் செய்யபடுகிறது என்று விவரித்துள்ளார் .ஆனால் பிரதமர் அலுவலகம் இது பற்றி ஒன்றையும் சொல்லவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.