ராமர் கோயில் கட்டுவது, ராமாயணத்தைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, ராம ராஜ்ஜியம் உருவாக்குவவது ஆகியவற்றை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்தது.
144 தடை சட்டம் நெல்லை முழுக்க போடப்பட்டு இருந்ததால் பல கட்சி தலைவர்கள் அங்கெங்கே கைது செய்யபட்டனர்.
செங்கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் இந்த ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்தது எதிர்த்து போராட்டம் நடத்திய 3,314 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டதாக சென்னை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்து மதவெறியை தூண்டும் விஸ்வ இந்து ரத யாத்தரையை தடுக்க கோரியும், பெரியார் சிலையை உடைக்கும் இந்து மதவெறி கும்பலை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட கோரியும் சென்னை அண்ணாசாலையில், அண்ணா சிலை அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்ற போது, காவிகும்பலின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி, இது பெரியார் பிறந்த மண் என்பதை நீருபிப்போம் என்று ரோட்டில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.எ.க்கள் உள்பட 690 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் " இன்று (20-03-2018) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்துக்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிராக நடைபெறும் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தும், அதனை மீறி 144 தடையுத்தரவு பிறப்பித்து முழு பாதுகாப்போடு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும், அதனை எதிர்த்துக் குரல் எழுப்பிய பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பினேன்.
இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், உரையையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். இதனைக்கண்டித்து எங்களுடைய எதிர்ப்பை அவையில் பதிவு செய்ததற்கு கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அவைக் காவலர்கள் மூலமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம்.
பின்னர், பாஜக அரசுக்கு ஜால்ரா போடும் இந்த அரசைக் கண்டிக்கின்ற வகையிலும், ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம்.
பி.ஜே.பிக்கு இங்கு இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ ஆட்சி எந்தளவுக்கு ஜால்ரா போடுகிறார்கள், துதி பாடுகிறார்கள், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதற்கெல்லாம் இந்த துரோகச் செயல்களே சாட்சி. இதன்மூலம், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல, பாஜக ஆட்சி என்பது நிரூபணமாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
பல இடத்தில் பிர்சனை தவிர்க்கும் விதமாக யாத்திரை வண்டி வேகமாக செல்வதை வீடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலபதிவர்கள் ரத வண்டினா மணிக்கு 10 கீமி வேகத்திலே போகனும்ஜி இப்படியா மணிக்கு 100 கீமி வேகத்திலே ஒடுரது என்ற விதத்தில் கிண்டல் செய்தும் .,மீம்ஸ் போட்டும் வருகின்றனர் இதனை கண்ணுற்ற பாஜக தலைவர் தமிழிசை தமிழ் நாட்டில் மட்டுமே எதிர்ப்பு வருவதாக தெரிவித்தார்.
பெரியார் சிலை உடைப்பை காட்டுமிராண்டிதனம் என்றும் ரத யாத்திரை தேவை இல்லாத வேலை என்றும் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் "சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு" என்றும் தெரிவித்துள்ளார்.