முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கணவரும் முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான ம. நடராசன் 20.03.2018 இன்று அதிகாலை 1:35 மணியளவில் காலமானார் என்பதை குளோபல் மருத்துவமனை அறிவித்தது
இதையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்கிற்குப் பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதா உடன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கபட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. நடராசன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, சசிகலாவை பரோலில் எடுக்க தினகரன் உள்ளிட்டோர் முயன்று வந்தனர். அதற்காக நேற்று, சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.
ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் பரோல் வழங்கியநிலையில், மீண்டும் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது நடராசன் மரணமடைந்துள்ளதால், அவருக்கு பரோல் வழங்க வேண்டும்.
இதற்கிடையே, நடராசன் இறப்புச் சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா இன்று பரோலில் வருவார் எனத் தெரிகிறது