நேற்று மக்கா முகர்ரமாவில் இருந்து மதீனா முனவ்வரா நகர் வரை ஜித்தா வழியாக செல்லக்கூடிய வகையில் ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயில்களை சவூதி அரசு விட்டுள்ளது. இரு வழிப்பாதையில் தினசரி 35 தடவை மணிக்கு 375 கிமீ வேகத்தில் ஓடும் வகையில் இரயில்கள் விடப்பட்டுள்ளது...
பாக் நீரிணைப்பு மற்றும் ஆதாம் பாலம், Adam's Bridge பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட பெரிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் 400 கிமீ சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.
இதன் பலன்கள் பல... அவற்றில் இதோ சில:
🌺 இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும் . அதனால் கணிசமான எரிபொருள் சேமிப்பு எற்பட்டு அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.
🌺 கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைந்து கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு நடக்கும் . அதனால் எற்படும் inland water ways தேசிய நெடுஞ்சாலை லாரிகள் போக்குவரத்து குறைய மீண்டும் அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.
🌺 கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும். அதனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும்.
🌺 தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும். அதனால் இராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.
300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று வளர்ச்சியை கணக்கில் கொண்டு காங்கிரஸ் திமுக அரசுகள் 5000 கோடி முதலீட்டில் ஆரம்பித்தன.
ஜூலை 2, 2005 திட்டப்பணிகள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப்படுகிறது.
ஆனால் இராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர...
சேது சமுத்திர திட்டத்திற்காக 300 மீ மணல் திட்டு (இராமர் பாலத்தை) அகற்ற முடியாது என்றும், பாலத்தை சேதப்படுத்தாமல் வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் பாஜக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அது மட்டும் இல்லை எனவே 300 மீ மணல் திட்டு (இராமர் பாலத்திற்கு) எந்தவித இடையூறும் வராது என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் உச்சநீதிமன்றத்தில் செய்கிறது...
மேலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால் கொழும்பு துறைமுக வர்த்தகம் பெரிதும் பாதிக்க படும் என்பதால் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ராஜபக்சே உடன் கைகோர்த்து கையூட்டும் பெற்று இலங்கைஅரசுக்கு லாபி செய்கிறார் என்ற குற்றசாட்டுக்கும் அவரிடம் மறுப்பு வரவில்லை..
இப்போது மத்திய அரசு மணல் திட்டு (பாலத்தை) சுப்ரமணியன் சுவாமி எண்ணபடியே 300மீ கீறாமல் 400கிமீ சுற்ற சொன்னால் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் படு தோல்வி தான் .இது கொழும்பு துறைமுகத்துக்கு தான் பயனை தரும் . ஆகமொத்தம் ஶ்ரீலங்கா வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலி கொடுத்து இந்தியா அரசு பாடுபடுகிறது...
ராஜிவ் காந்தி கொலையில் ஜெயின் கமிஷன் குற்றம் சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முக்கிய புள்ளி ,பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி எப்படி தனி ஆளாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும் திட்டத்தை உச்சநீதிமன்றம் சென்று முட்டு கட்டை போட முடிகிறது என்றெல்லாம் நாம் கேள்வி கேட்க போவதில்லை...
காரணம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் முக்கிய புள்ளிகள் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் உள்ளே புகுந்த காரணத்தினால் எழுச்சி பெற்ற நம் மாணவ செல்வம் கூடிய கூட்டதை செக்ஸ் என்றாலும் கூட்டம் வரும் என்று கூறிய ஆர்எஸ்எஸ் ராதாராஜன் போன்றவர்கள், போராடி நம் மாணவர்கள்பெற்ற வெற்றியை கூட கொண்டாட விடாமல் இறுதி நாட்களில் விவேனந்தர் இல்லத்தில் இருந்து கொண்டு கற்களை எரிந்து மெரினாவில் கலவரம் அரம்பித்து என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை இங்கே சொல்லியும் தெரிய வேண்டியது இல்லை...
வால்மீகியால் நமக்கு சுட்டி காட்டபட்ட இராமாயாணம் தந்த இராமர் அந்த காவியம் கூறும் சரயூ நதியில் தற்கொலை ஏன் செய்தார் என்றும்.,
கர்ப்பினி பெண்ணான மாதர் குல மணிக்கம் சீதாபிராட்டியை ஏன் "வண்ணான் சொன்னான்" என்று காரணம் காட்டி கொடிய வனதுக்கு தனியாக அனுப்பினார் என்றெல்லாம் அறிவுமிகு ஆர்எஸ்எஸ் முக்கிய புள்ளிகள் உடன் தர்க்கம் செய்யவும் மனமில்லை...
தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆண்டு தோறும் சுமார் 10000 கோடிகள் வருமானம் மற்றும் சுமார் 50000 இந்தியர்கள் வேலை வாய்ப்பை பெற்று தரும் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் தடையைமட்டும் தான் தருவார்களா.
அல்லது நம் நெற்களஞ்சியம் தஞ்சைமாவட்ட விவசாய நிலத்தில் வளர்ச்சி என்ற பெயரில் மீதேன் எடுக்கும் ஆண்டு தோறும் 300 கோடி கார்பொர்ட் வளர்ச்சிக்கு நமது 3000எக்கர் நன்செய் நிலத்தை தானம் செய்யுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி கொண்டே தான் இருப்பார்களா...
6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், 40 பைசாதான் பெறுகிறது என்கிற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் கூற்றையும் மேற்கோள் காட்டி...
தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும் திட்டத்துக்கு யாராலும் பயன்படுத்தாத அந்த 300மீ சேது சமுத்திர மணல் திட்டின் அகலத்தை மட்டும் தாருங்கள் என்று ஐந்து வீட்டையாவது தாருங்கள் என்று மஹாபாரத கண்ணன் போல் இறஞ்சி கேக்கும் நிலையில் தான் இன்றும் நாம் உள்ளோம்...
சவூதியில் ஒன்னேகால் மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னை வரும் ஈடான பயணம் இன்றோ சத்தியப்படுகிறது .
எங்கு அறிவியல் இருக்கிறதோ அங்கு வளர்ச்சி நிச்சயம் இருக்கும் . இங்கோ யாரும் உபயோக படுத்தாத இடத்தில் கூட வெறும் 300மீ மணல் திட்டு அகலம் கூட தர மறுத்து மதவாதம் பேசி, சூற்றுபுற துறை அனுமதி தந்தும், 12 வருடமாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முட்டுகட்டை செய்து பாஜக ஆட்சியில் தடையும் போட்டு வெற்றியும் பெறுகிறது...
ஆதனாலே அங்கோ வளர்ச்சி, இங்கோ தடை மற்றும் தாழ்ச்சி...