பூமியில் மகிழ்ச்சியான இடம் ஃபின்லாந்து என இந்த ஆண்டுக்காண வருடாந்திர அறிக்கையில் ஜ.நா குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த இடத்தை நார்வே பிடித்திருந்தது.

Special Correspondent

மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி அறிக்கை அளவிடும்.

நோர்டிக் நாடுகள்தான் வழக்கமாக முதல் ஐந்து இடங்களை பிடிக்கும். துணை சஹாரா ஆஃப்ரிக்க நாடுகள் கடைசி ஜந்து இடங்களில் இருக்கும்.

கடந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்தது மத்திய ஆஃபிர்க்க குடியரசு நாடாகும். இந்த ஆண்டு கடைசி இடத்தில் புருண்டி நாடு உள்ளது.

இந்த ஆண்டின் ஐ.நா அறிக்கையில் குடியேறியவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையிலும், ஃபின்லாந்தில் குடியேறியவர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் அதிகம் மகிழ்ச்சியாக உள்ள பத்து நாடுகள்.

1. ஃபின்லாந்து
2. நார்வே
3. டென்மார்க்
4. ஐஸ்லாந்து
5. சுவிஸர்லாந்து
6. நெதர்லாந்து
7. கனடா
8. நியூசிலாந்து
9. சுவீடன்
10. ஆஸ்திரேலியா

பிரிட்டன் 19வது இடத்திலும், அமெரிக்கா 18வது இடத்திலும் உள்ளது. மொத்தம் 156 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவிற்கு 133ஆவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் 122 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்த வருடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 11 இடங்கள் பின் தங்கி 133-வது இடத்தைப் பெற்றுள்ளது.

சார்க் நாடுகளில் பாகிஸ்தான் 75-வது இடத்தை பெற்று முன்னணியில் உள்ளது. பூடான் 97 வது இடத்திலும் நேபாளம் 101 வது இடத்திலும், வங்காள தேசம் 115 வது இடத்திலும், இலங்கை 116 வது இடத்திலும் உள்ளன.