இராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்பி ர. சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, இராமர் பாலத்தை அகற்ற முடியாது என கூறியுள்ளது. சேது சமுத்திர திட்டத்திற்காக இராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், பாலத்தை சேதப்படுத்தாமல் வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எனவே இராமர் பாலத்திற்கு எந்தவித இடையூறும் வராது என மத்திய அரசு கூறியுள்ளது.
இராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும், அதனால் தான் இராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன பகுதிதான் இராமர் பாலம் உள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள பகுதி ஆழமின்றி காணப்படுகிறது. இதனால் கப்பல்கள் இந்த பாலத்தை சுற்றி வந்து கூடுதலாக சுமார் 400 கி.மீ. பயணம் மேற்கொள்கின்றன. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் விரயமாகி எனவே இராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் கடலை ஆழப்படுத்தும் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு திமுக அரசின் முயற்சியால் துவக்கப்பட்டது.
இதற்கு முட்டுகட்டை ஹிந்து அமைப்புகள் செய்ததால் வளர்ச்சி தரும் திட்டம் கிடப்பில் போட பட்டது ..இப்போது பாஜக அரசு வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் ஹிந்து அமைப்புகள் கருத்துக்கு செவி சாய்த்து திட்டம் குறிக்கோளை தடை செய்துள்ளாதாக வணிக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.