குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். காட்டுத்தீயில் சிக்கிய 36 பேரில் 26 பேர் மீட்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் விபரம் :
சென்னையைச் சேர்ந்த சுசிலா ஹேமலதா புனிதா சுபா அருண் நிஷா ., கோவையை சேர்ந்த விபின் ஈரோட்டைச் சேர்ந்த திவ்யா விவேக் தமிழ்ச்செல்வன். இவர்களில் திவ்யா மற்றும் விவேக் கணவன்-மனைவி என்பது தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்டவர்கள் விபரம் :
திருப்பூரை சேர்ந்த சிவசங்கரி ராஜசேகர் (29) சாதனா (11) பாவனா(12) ஈரோட்டை சேர்ந்த சதீஷ் நேகா(9) பிரபு(30) கண்ணன்(26) சபிதா கவிதா சுப்ரமணியன் சென்னையை சேர்ந்த பூஜா(27) சஹானா(20) மோனிஷா(30) ஸ்வேதா(28) நிவேதிதா(23) இலக்கியா(22) விஜயலட்சுமி(22) அனுநித்யா(25) சேலத்தை சேர்ந்த தேவி.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து விடு திரும்ப வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் அனுமதியில்லாமல் மலையேற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்குவதில்லை என்று தெரிவித்தார். அனுமதி பெற்று இருந்தால் தக்க பாதுகாப்பு வழங்கிருப்போம் என்று மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். வனத்துறையிடம் அனுமதி பெறாமல் மலையேற்றத்திற்கு அழைத்து சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் "தேனி, குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றத்திற்குச் சென்ற 36 பேரில் 10 பேர் இறந்த செய்தி அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உள்ளாக்குகிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, மீதமுள்ளவர்களை மீட்கும் பணியை மாநில அரசு முடுக்கிவிட வேண்டும்"என்றும் கூறியுள்ளார்.