வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், விவசாய சீர்திருத்தங்களுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து இந்திய கிசான் சபா என்னும் அமைப்பு மஹாராஷ்ஷ்ட்ரா விவசாயிகளைத் திரட்டி மாபெரும் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ஒன்றினை திட்டமிட்டது.

Special Correspondent

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் ,சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

முதலில் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ள விவசாயிகள் அனைவரும் திங்களன்று மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமீட்டனர். இதன் காரணமாக மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

Special Correspondent

180 கி.மீ. தொலைவை 5 நாட்களாக நடந்து ஞாயிறு நண்பகலில் மும்பை மாநகரத்தின் தாதர் எல்லையை இந்த பிரமாண்டமான விவசாயிகள் அணியானது வந்து சேர்ந்தது.

இந்நிலையில் திங்களன்று அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர்கள்.

சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Special Correspondent

விவசாயிகள் எழுச்சியை கண்டு விவசாயிகளது கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த தகவலை மாநில நீர் வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாயிகள் கோரிக்கை அனைத்தையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது; எனவே போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் எழுச்சியை பெரிதும் புகழ்ந்து தனது ட்விட்டரில் பதிவுட்டுள்ளார்.