பசுக்களை மட்டுமே இனப்பெருக்கம் செய்வதற்காக, பாலினம் பிரிப்பு விந்தணு தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

Special Correspondent

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டப்பேரவையில் 2018-2019க்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கேப்டன் அபிமன்யு நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர் "அரியானாவில் பால் உற்பத்தியை பெருக்கவும், தெருக்களில் சுற்றி வரும் காளைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாலினம் பிரிப்பு விந்தணு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் இனப்பெருக்கம் செய்யப்படும் கன்றுகளில் 90 சதவீதம் பெண் கன்றுகளாகவே இருக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே ஆண் கன்றுகளாக இருக்கும். இதன் மூலம், தெருக்களில் காளைகள் சுற்றித் திரிவது கட்டுப்படுத்தப்படும். மேலும், பெண் கன்றுகளின் அதிக எண்ணிக்கையால் மாநிலத்தில் பால் உற்பத்தி பெருகும்" என்றார்.

மேலும் "விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரித்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏற்ற வகையில், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அரியானாவில் சராசரியாக தனிநபர் பயன்படுத்தும் பாலின் அளவு 878 கிராமாக உள்ளது. தேசிய அளவில் இது 329 கிராமாக மட்டுமே உள்ளது" என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இயற்கை கட்டுபடுத்தி செய்யும் இந்த முயற்சி பின் விளைவுகளை கால்நடைகளுக்கு எற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கண்டித்து உள்ளனர்.