கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பியும் நடிகருமான முரளி மோகன்.
மாநிலங்களுக்கான சலுகைகள் வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டே செயல்படுமாயின் தெற்கில் இருக்கும் 5 மாநிலங்களும் தனியாகப் பிரிந்து தனிநாடு கோரிக்கையை முன் வைத்துப் போராட வேண்டிய நிலையை மத்திய அரசே ஊக்குவித்ததாக ஆகிவிடும்.
தென்னக மாநிலங்கள் சலுகை விஷயத்தில் மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என்று பேசி இருந்தார்.
எந்தச் சலுகையாக இருந்தாலும், அவை முதலில் வட இந்தியாவுக்காகவே ஒதுக்கப்படுகின்றன. வட இந்தியர்களோடு ஒப்பிடுகையில் தென்னிந்தியர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறார்கள். இது சரியில்லை.
இதே நிலை தொடருமானால் நாங்க்ள 5 மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தனி நாடு கோரி போராடத் தொடங்கி விடுவோம் எனும் அவரது உரை பேசப்பட்ட அன்று பெரிய விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லையாயினும், சமீபத்தில் தெலுங்கு தேச எம்பிக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தின் பின் இன்று மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே இந்திய அளவில், டிவிட்டரில் ஒரு தலைப்பு டிரெண்டிங் ஆகியிருக்கிறது. அது 'திராவிடநாடு'. டிரெண்டிங் செய்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
திராவிடநாடு' கொள்கையை கைவிட்ட போது முன்னாள் முதல் அமைச்சர் அண்ணா சொன்னது, "திராவிடநாடு கொள்கையை நாங்கள் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன"
."திராவிடநாடு இனி தேவை இல்லை, அதற்கான தேவையை இந்தியா பூர்த்தி செய்து விட்டது" என அண்ணா சொல்லவில்லை. காரணம், என்றாக இருந்தாலும், மாநில உரிமைக்கு ஆபத்து வரும் போது, இந்தக் கோரிக்கையை யாராவது எழுப்புவார்கள் என்பதை அண்ணா உணர்ந்திருப்பார். அதனால் தான் 'கைவிடுகிறோம்' என்று சொன்னார் என்றும் கூறலாம்...
திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். தமிழகம் எங்களை வழிநடத்த வேண்டும் என்று சென்ற மாதம் கன்னடமொழி வளர்ச்சி ஆணையம் அதிரடியாக கூறியதும் குறிப்பிடதக்கது.
உற்பத்தி திறன் கோட்பாடு விகிதத்தில் தெற்கு மாநிலங்கள் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கை தரும் வேளையில் மோடியின் பாஜக இந்திய அரசு சரிவர பிரதினிதுவத்தை தருவதில்லை என்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.