கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் உள்ள பத்திரகாளி கோயிலில், பக்தர்களிடமிருந்து காணிக்கையாக இரத்த தானம் பெறப்படுகிறது.
பக்தர்கள் அளிக்கும் இரத்தத்தை கொண்டு காளிக்கு அபிஷேகம் செய்வது இக்கோயிலின் வழக்கமாகும். ஆண்டுக்கு ஒருமுறை 12 நாட்களுக்கு இக்கோயிலில் திருவிழா நடத்தப்படுகிறது.
இரத்த அபிஷேகம் செய்தால் காளி மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மருத்துவ துறையின் மேற்பார்வையில் பக்தர்களிடமிருந்து இரத்தம் பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகைகள் கோயிலுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரத்த தான அபிஷேகம் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் என்று வந்த புகார்களை அடுத்து மக்களிடம் இரத்தம் பெறுவதை தடுத்து நிறுத்தும்படி கேரளா அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.