எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 4-வது நாளாக மக்களவை முடங்கியது. தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி விவகாரம், பெரியார் சிலை விவகாரம் மற்றும் வங்கி மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.
தொடர் முழக்கங்களை அடுத்து மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தில் பாஜகவினரால் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்த, அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர்.
தந்தை பெரியார் சிலைகள் பாஜகவினரால் உடைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனக்கூறி அதிமுக எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அவையின் நடுப்பகுதிக்கு வந்து தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.
அதன்பின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி எம்.பிக்கள் நான்கு நாட்களாக முழுக்கம் எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி ரூ.12,700 கோடி மோசடி செய்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி.களும் கூச்சலிட்டு வருகின்றனர். இதனால் மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 4-வது நாளாக ஒத்திவைத்துள்ளார்.