அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படத்தின் டீசர் வெளியானது. வெளிவந்த ஒரே நாளில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 2 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுவிட்டது இந்த டீஸர்.

Special Correspondent

மேலும் இது 'காலா' முதல் நாள் டிரென்டிங்கில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டது. இது முதல் நாள் கணிப்பு தான், வரும் நாட்களில் இந்த டீஸரின் பார்வையாளர்கள் அதிகரிப்பார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரஜினிகாந்த் பட டீஸரை பின்னுக்குத் தள்ளி மகேஷ் பாபு டீஸர் முதலிடம் பிடித்திருப்பதை டோலிவுட் திரையுலகம் மகிழ்ந்துள்ளது.

இதில் முதல் முறையாக முதல்அமைச்சர் ஆக மகேஷ் பாபு நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.